Date:

மூன்று மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் இதோ!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வௌியிடும் நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

 

அதற்கமைய, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.

அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் பதவிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, கடந்த மே 27 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது 50% பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரின் பெயர்களையும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வௌியிடவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின், US தூதரகம் முற்றுகை ; பொலிஸாருடன் மோதல்

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில்...

“ஈரான் இன்று தாக்கினால், இதுவரை பார்த்திராத தாக்குதல் நடக்கும்”

முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாக...

கலன்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள்...

ஈரான் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...