ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேன் பூச்சிகள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63 பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டடம் ஒன்றில் தேன் பூச்சிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் வலயமட்ட விளையாட்டு போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகிய இந்நிலையில் திடீரென தேன்பூச்சிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி குத்தியுள்ளது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் உள்ளடங்கலாக 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.