Date:

இலங்கை வந்தடைந்த நியூசிலாந்து துணை பிரதமர்!

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.

அவரின் விஜயமானது, அவுஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் மற்றும் இந்தியாவுக்காக அமைந்துள்ளதுடன், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை தொடர்ந்து, இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் செல்லவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு இத்தனை நோயா நோய் பட்டியல் இதோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ...

“நாங்கள் எதற்கும் தயார்”

இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)...

சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய...

Breaking ரணிலுக்கு சரீர பிணை

பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6...