கொட்டாஞ்சேனையில் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று சிலாபம் – விலத்தவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.