Date:

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை வௌியிட்டுள்ளார்.

 

அதில், “உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக உலக மக்களை வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கின்றேன். உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

69 வயதான பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட், அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

 

அவருக்கு பாப்பரசர் லியோ XIV என பெயரிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான...

ரஷ்யாவின் கரையோரப் பகுதியில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.4 ரிச்டர் அளவிலான...

விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை...

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

எம்பிலிப்பிட்டிய கங்கேயாய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர்...