கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்திற்கு தமது எதிர்ப்புகளை தெரிவித்து ஏராளமான பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் என கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்த மேட்டு சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து என்ன பண்ண அப்புசாமி மாவட்த்தையில் அமைந்துள்ள பிரபல தனியார்கல்வி நிலையத்திற்கு பேரணியாக நடந்து வந்து பிரபல தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள அந்த சிறுமியின் மரணம் ஏற்பட்ட இடத்தை நோக்கி பேரணியாக நடந்து வந்து அந்த இடத்திற்கு முன்னால் இருந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தமது ஆறுதல்களையும் இந்த மரணத்திற்கு காரணமானவர்களுக்கு பாரிய எதிர்ப்பையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக இந்தப் போராட்ட ஏற்பாட்டு குழுவினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இறுதியாக இறந்த அந்த மாணவிக்கு தத்தமது சமய அனுஷ்டானங்களின்படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை வருகை தந்த அனைவரும் நிகழ்த்தியிருந்தனர்