Date:

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 

இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே,

 

“ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL புதிய வர்த்தமானி வௌியிட்டதன் காரணமாக, இப்போது அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இதேபோல், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வரும் ஏனைய வாகனங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.”

 

இதேவேளை, பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, இறக்குமதி அனுமதிகளைப் பெற்று புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல்கலைக்கழகங்களில் வன்முறைகளை ஜே.வி.பி.யின் மாணவர் செயற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டும்- நாமல் ராஜபக்ஷ

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்துவதற்கு ஜே.வி.பி.யின் மாணவர் செயற்பாட்டாளர்கள்...

ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் குறித்து வௌியான அறிக்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு,...

நிர்வாண பகடி: மாணவன் மரணம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம்...

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373