உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும். (27)
அதன்படி, இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபடும் வாய்ப்பு கிடைக்கும்.
உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் போற்றப்படும் மற்றும் செங்கடகல இராச்சியத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள புனித தந்த தாதுவை கண்டு வழிபடும் வாய்ப்பு கடந்த 18 ஆம் திகதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் கிடைத்தது.
கடந்த 9 நாட்களில், இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபட வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன், இன்றும் அதனை காண்டு வழிபட ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கண்டி நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவது உட்பட, நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தும் திட்டத்தைத் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க தெரிவித்தார்.