ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இங்கு எண்ணெய் மற்றும் வேதிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்களும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது