உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும்(25) இடம்பெறுகின்றது.
இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று(24) ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.