Date:

ஜனாதிபதி கண்டிக்கு திடீர் விஜயம்

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

 

சிறி தலதா வழிபாட்டிற்காக இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஏற்கனவே நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு குறித்த பகுதிகளுக்குச் இடங்களுக்குச் சென்றுள்ளார்.

 

இதேவேளை, வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேற்றிரவு தன்சல் (உணவு தானம்) வழங்கப்பட்டுள்ளன.

 

சிறி தலதா வழிபாடு இன்று (25) எட்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

 

அதற்கமைய, குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

கண்டிக்கு ஏற்கனவே சுமார் 400,000 யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளதால், இன்று கண்டிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டொக்

இந்தோனேசியாவில் டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெற்று...

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் தாக்குதல்: தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்...

சமன் ஏக்கநாயக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க...

கோட்டாவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு...