Date:

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 

இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 

அரசு நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தபால்மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நாட்களில் தங்கள் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். 

 

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 

எவ்வாறாயினும் தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான நேரம் மேலும் நீட்டிக்கப்படாது என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே சுரேஸ் சலே கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி...

இலங்கை அணியின் வீழ்ச்சி குறித்து சங்கக்கார வேதனை!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொண்டுள்ள பின்னடைவைக் கண்டு வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த...

அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரான 2 மனுக்கள் தள்ளுபடி!

டித்வா புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்...

மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் வியாழக்கிழமை (26)...