Date:

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தார்.

 

 

நேற்றிரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

 

 

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சில அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு சில அரச ஊழியர்களின் விடுமுறைகள்...

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...