Date:

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Big Breaking களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்படும்

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும்...

Power cut update:நாட்டின் பல பிரதேசங்களில் இருளில் மூழ்கிக் கொண்டு செல்கிறது

மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை...

அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித...

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...