கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, இப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
* இடி மின்னல் நேரங்களில் வெளியில் அல்லது மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்கவும்.
* பாதுகாப்பான கட்டடம் ஒன்றிற்குள் அல்லது மூடப்பட்ட வாகனம் ஒன்றிற்குள் இருக்கவும்.
* வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற திறந்தவெளி இடங்களில் இருப்பதை தவிர்க்கவும்.
* கம்பி இணைப்பு உள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்னணு உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* மிதிவண்டிகள், உழவு இயந்திரங்கள், படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களை பயன்படுத்துவதை நிறுத்தவும்.
* பலத்த காற்று காரணமாக மரங்கள் அல்லது மின்சார கம்பிகள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளதால், இதற்கு முன்னெச்சரிக்கையாக இருக்கவும்.
அவசர நிலைமைகளில், பிரதேச இடர் முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.