Date:

வத்திக்கானின் தற்காலிக தலைவராக கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபெரல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாகவே காலமானார் என வத்திக்கான் திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வத்திக்கானால் வெளியிடப்பட்ட இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்.

 

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் இறைச் சேவையாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் சென். பீட்டர்ஸ் பெசிலிக்காவிலுள்ள இல்லத்தில் நேற்று (21) காலமானார்.

 

அவரது நித்திய இளைப்பாறலை வத்திக்கான் திருச்சபை காணொளி அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது. இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு உலக நாட்டு தலைவர்களும், மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...