Date:

கொழும்பு வாழைத்தோட்டம் சம்பவம் வெளியான மேலதிக தகவல்கள்!

கொழும்பு வாழைத்தோட்டம் (கெசல்வத்த) பீர் சாய்பு வீதியில் உள்ள ஒருவீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை

 

சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் தற்போது கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்

 

குறித்த சிறுவன் கடந்த 13 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுடன் ஒரு கடைக்குச் சென்று, கடைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் கேற்றை தட்டியதாகக் கூறப்படுகிறது.

 

இதன்போது குறித்த வீட்டில் வசிக்கும் ஒருவர் அந்தச் சிறுவர்களில் ஒருவனை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

இதன்போது அச்சமடைந்த சிறுவன் அறையில் ஒரு ஜன்னலைத் திறந்து தரையில் குதித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

 

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று விட்டதாகவும், சம்பவத்துக்கு உதவிய 59 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கெசல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

 

தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நீரில் மூழ்கிய நுவரெலியா! | 4 பேர் உயிரிழப்பு!

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம். நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற...

சீரற்ற காலநிலை | அவசர நிலைமைக்கு அழைக்க தொலைபேசி இலக்கம்!

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற...

சீரற்ற காலநிலை | உயிரிழப்புக்கள் 31 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் | நடைபெறும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...