Date:

அமெரிக்காவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

 

 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

 

மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் லேசான பொருட்சேதங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

Breaking கொலன்னாவை முனையத்தில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...