அரசாங்கம், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அதிகபட்ச நிவாரணம் அளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மேல் கொடுக்க விரும்பினாலும், தற்போதைய சூழ்நிலையில் இதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
பல நிலைகளில் வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இப்போது வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.