கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, மட்டக்குளி பிரதேசத்தில் பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்ற போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளதைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.