பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்தும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் விரிவான ஆலோசனை நடத்தும் என பதில் அளித்திருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.