பயணக்கட்டுப்பாடு, சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பொதுமக்கள் மீறுவதால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இந்த நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறிய எழுமாறானப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.