Date:

மோடி இன்று அநுராதபுரத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.

 

ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் பரிசாக நிறுவப்பட்ட மஹாவ – அநுராதபுரம் தொலைபேசி சமிக்ஞை அமைப்பு உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

புதுப்பிக்கப்பட்ட மஹாவ-ஓமந்தை ரயில் மார்க்கமும் இன்று காலை திறக்கப்படவுள்ளது.

 

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரம் விஜயத்தை முன்னிட்டு இன்று அனுராதபுரம் நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

அனுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, வைத்தியசாலை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அநுராதபுரம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் வீதிகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்படவுள்ளன.

 

இந்த வீதிகள் மூடப்படும் போது, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...