Date:

யோஷித மற்றும் டெய்சியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

 

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.

 

குறித்த இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.

 

இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

அதன்படி, இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப்...

எரிவாயு தட்டுப்பாடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...