மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (ஏப்ரல் 01, 2025) பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப் பொருள் சோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையில், சந்தேகத்திற்கிடமான இருவரை பொலிசார் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற போது, சந்தேகநபர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் பதற்றமடைந்த நிலையில் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் உடனடியாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.