வங்காள விரிகுடாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர். எனினும், இதன் காரணமாக சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்கம் பற்றி பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர், “அதிகாலையில் கொல்கத்தாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. விழித்திருந்ததால், உணர்ந்தேன்,” என பதிவிட்டுள்ளார்.