Date:

செவ்வந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியானது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

 

சந்தேக நபர், 243/01, ஜெயா மாவத்தை, நீர்கொழும்பு வீதி, கட்டுவெல்லகம என்ற முகவரியில் வசிக்கும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தேசிய அடையாள அட்டை எண் 995892480V. ஆகும்.

 

வழக்கறிஞர் போல் நடித்த செவ்வந்தி, நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு ரிவால்வரை கடத்தி வந்து கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளரை 071-8591727 என்ற எண்ணில் அல்லது சிசிடியின் பொறுப்பதிகாரியை 071-8591735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.

 

சந்தேக நபரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அத்தகைய தகவல்களை வழங்குபவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிள்ளையான் கைது…!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை...

Breaking தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை

கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய...

ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு : அமைச்சரவை அனுமதி

2025 வரவு செலவுத்திட்டத்தின் படி தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பிணை..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373