கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் துணைக்கருவி கடையின் உரிமையாளரை சுட்டுக் கொல்லும் உள்ளூர் திட்டத்தை வழிநடத்தியவரும், துப்பாக்கியை வழங்கியவருமான நபர் முகத்துவாரம் (மோதர) மெத்சந்த செவன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மொபைல் போன் துணைக்கருவிகள் கடைக்குள் புகுந்து, அதன் உரிமையாளரான கொழும்பு 14, ஸ்டேட் ரோட்டைச் சேர்ந்த 38 வயது சஷி குமார் என்பவரை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தப்பி ஓடிவிட்டனர். இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், அவரது ஆலோசனையின் பேரில் இந்த நாட்டில் குற்றச் செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்