நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்