மித்தெனிய கொலை தொடர்பாக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இன்று (21) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அருண விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனின் சடலங்கள் குடகல்ஹார இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளன.