Date:

சர்வதேச பாடசாலைகள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஆய்வு

சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

 

பெப்ரவரி 01. 2025 ஆம் திகதி நடைபெற்ற விசேடக் கூட்டத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் போசகருமான இம்தியாஸ் பாகிர் மாகார் அவருடைய தலைமையில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் விசேடக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதில் கல்விமான்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

 

சர்வதேச பாடசாலைகளின் தோற்றம் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் அவற்றின் தரம் குறித்து எந்த அமைப்புக்களோ, நிறுவனங்களோ ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. இதன்காரணமாக அதிகமான சர்வதேசப்பாடசாலைகள் தரம் குறைந்தே காணப்படுகின்றது. அதுபோல் தகுதி குறைவான ஆசிரியர்கள், வளப்பற்றாக்குறை, நெருக்கீடு, பாதுகாப்பின்மை வழுவற்ற கட்டிடங்கள், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் குறைபாடு, பயிற்சிகள் குறைபாடு, ஒழுக்க குறைபாடு

போன்ற பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

வெகு விரைவில் ஒரு குழு அமைக்கப்பட்டு இது சம்பந்தமான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கல்வி அமைச்சின் ஆலோசனையோடு சரியான பொறிமுறையொன்றினை உருவாக்குவதே எமது நோக்கம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்

திரு. ஷாம் நவாஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.

 

இத்திட்டத்துடன் இணைய ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திட்க்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பினை மேற்கொள்ளவும் 0777359678 அல்லது acumlyf@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு...