Date:

13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – பொலிஸார் வௌியிட்ட தகவல்

 

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

ஏனைய 6 சம்பவங்களும் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக 25 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 03 T-56 துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...