Date:

டேன் பிரியசாத் கைது

 

சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

அவர் இன்று (11) காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

 

 

 

2024 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என்று நானேரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக டேன் பிரியசாத்துக்கு எதிராக நிகவரெடிய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

 

 

 

இது தொடர்பாக, கல்கமுவ நீதவான் நீதிமன்றம் டேன் பிரியசாத்துக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையையும், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவையும் பிறப்பித்திருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட...

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி,...

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...