அழகான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற திட்டம் இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் தலைமையிலான தேசிய திட்டமான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதன்படி பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்புடன் மட்டக்குளிய காக்கை தீவு கடற்கரையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்துடன் இணைந்து, மேல் மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கிய 124 இடங்களில் காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி வரை இந்த கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது