Date:

லசந்தவின் மகளுக்கு உறுதியளித்த பிரதமர்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

 

 

தேவைப்பட்டால், லசந்த விக்ரமதுங்க சார்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும், நீதியை நிலைநாட்ட எடுக்கக்கூடிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

 

 

 

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

 

 

 

“எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த காலங்களிலும் எங்கள் நிலைப்பாடு இதுதான். இன்றைய எமது நிலைப்பாடும் அதுதான். இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நான் அவளுக்கு உறுதியளிக்கிறேன். அதற்குத் தேவையான சுதந்திரம் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...