அத்தியாவசிய பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் பொதுமக்கள் தற்போது பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிப்பதற்கு இரண்டு தினங்களை ஒதுக்க வேண்டும் என சபாநாயகரிடமும், கட்சித் தலைவர்களிடமும் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.