Date:

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

 

அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை “அர்ச்சுனா லோச்சன்” என்று பெயரிட்டனர்.

 

ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

எனவே, சரியான சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

 

அநுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் நேற்று (21) அதிகாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

அதன்படி, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

 

இதையடுத்து, மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இதன்படி சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த விடயம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...