Date:

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

 

மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, தொலுவ, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோரளை, பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பிரதேச செயல பிரிவுகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...