Date:

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 04 மாவட்டங்கள்

 

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 15 ஆம் திகதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அநுராதபுரம், கிளிநொச்சி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...