Date:

விமான நிலையத்திற்குள் சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.

 

இருப்பினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இந்தப் பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...