Date:

அரசு ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

 

இதன்போது, மேற்படி விடுமுறையை அங்கீகரிப்பதில் மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்கள் தொடர்பில் இதில் வௌியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

2022 ஜூன் 22 திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி, சம்பளமின்றி விடுமுறை வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

அரச உத்தியோகத்தர்கள் சிலர் 5 வருடங்கள் உள்நாட்டில் விடுமுறையைப் பெற்றுக்கொண்டு, விடுமுறையை இரத்து செய்யாமல் வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில் விடுமுறையை அங்கீகரிக்கும் முன்னர் இது தொடர்பில் பரிசீலிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு விடுமுறைக்கான விண்ணப்பங்களை அனுப்பும் போது, உத்தியோகத்தர்கள் முன்னர் எடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை சரிபார்த்து, அட்டையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை...

ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் பிமல்

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து...