Date:

“கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டில் ஆரம்பம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் ஜனாதிபதி செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு

களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. நாகலகம் வீதிய பகுதியில்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக...

இது தேசத்தின் துயரம்..!

மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம். ​நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான...

கம்பளையில் பெரும் துயர்

கம்பளை வைத்தியசாலையில் மாத்திரம் தற்போது மரணித்தவர்களின் 48 உடல்கள் காணப்படுகின்றன. 100...