இலங்கை வரலாற்றில் அரிசி ஒரு கிலோவுக்கான மிக அதிகரித்த
வரியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறவிட்டு வருவதாக
ஐக்கிய மக்கள் சக்தி
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டுகிறார்…..
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1K அரிசிக்கு 150 ரூபாய்க்கும் குறைவான தொகையே செலவாகின்றது….
ஆனால் அரசாங்கம் 1K அரிசிக்கு வரியாக 65 ரூபாவை அல்லது
45% வரியை அறவிடுவதால்
ஒரு கிலோ அரிசி 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது
முன்னர் இருந்த அரசுகளும் இதுபோன்ற சூழ் நிலைகளில் அரிசியை இறக்குமதி செய்துள்ளன ஆனால் 10 ரூபாய்போன்ற சிறிய தொகையைஅறவிட்டே அவை மக்களுக்கு குறைந்த விலையில்அரசியை வழங்கின எனவும்
அவர் ஊடங்களுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்தார்