கஹட்டோவிட்ட குட் சயில்ட் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (21) அன்று இமாம் ஷாபி சென்டர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாலர் பாடசாலையின் பிரதம ஆசிரியர் திருமதி ரிஸ்வானா அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் குட் சயில்ட் பாலர் பாடசாலையின் அனைத்து மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நுண்ணறிவு , குழுச் செயற்பாடுகள் , சுறுசுறுப்பு , ஆக்கத் திறன் போன்ற மாணவர்களின் வெளிக்கள செயற்பாடுகளுடன் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளும் இடம்பெற்றன..
விளையாட்டு போட்டி நிகழ்வுகளின் இறுதியில் மாணவர்கள் தத்தமது பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.