Date:

‘கலாநிதி’ பட்டம் தொடர்பில் மூவரிடம் CID வாக்குமூலம்

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (20) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் உட்பட மூன்று அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பெற்றிராத ‘கலாநிதி’ பட்டத்தை பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் தவறாக குறிப்பிட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...

நுவரெலியாவுக்கு இரவு நேர பயணம் வேண்டாம்!

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது. இன்று (12) நிலவரப்படி,...