Date:

காலி மார்வெல்ஸ் அணி உரிமையாளருக்கு பிணை!

கண்டி, பல்லேகலயில் நடைபெற்று முடிந்த லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியப் பிரஜை பிரேம் தாக்கூருக்கு கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தாக்கூரின் சட்ட பிரதிநிதிகள் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினர்.

அந்த கோரிக்கைக்கு இணங்க நீதிவான் 500,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 5,000,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலதிகமாக சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு புதன்கிழமையும் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.

வழக்கின் அடுத்த விசாரணை 2025 ஜனவரி 27, அன்று நடைபெறும்.மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் தொடர்பில் சந்தேகநபர் யோசனை ஒன்றை முன்வைத்திருந்த நிலையில், அது குறித்த வீரர் ஐசிசிக்கு தகவல் வழங்கியதையடுத்து இந்த கைது இலங்கையின் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...