Date:

‘40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை’

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பிலான சாம்பல் மண்டலத்தால் சுவாச நோய்கள் ஏற்படலாமென அறிக்கையொன்றில் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட்ட பெறுமதி வாய்ந்த பொருள்களை இழந்ததாக குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக நேற்று முன்தினம் உயர்ந்திர்ருந்தது.

இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட சிறிய, மத்தியதர புவியதிர்ச்சிகளால் கொங்கோ தலைநகர் கோமாவிலுள்ள கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...