Date:

ரஞ்சன் வேட்புமனு விவகாரம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்று, பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

கம்பஹா மாவட்ட சுயேச்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த...

ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம்...

USS TULSA’போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...