எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவுக்கு வந்தது. காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்கெடுப்புக்கென காலம் ஒதுக்கப்பட்டிருந்தது
வாக்களிப்பு இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. தேர்தல் செயற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் ஆணையாளர் ஈடுபட்டார்.
இதேவேளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளை இன்று (26) இரவு 10.00 மணிக்கு முன்னர் வெளியிட முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் ஒத்துழைப்புடன் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். ஒரு வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் வாக்குகள் எண்ணப்படும்.
தேர்தல் முடிவுகள் காலி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.