ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த முக்கிய கேள்வி தலைதூக்கியுள்ளது.
காசாவில் உள்ள பெரும்பாலான ஹமாஸ் தலைவர்கள் ஏற்கனவே இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், யாஹ்யா சின்வாரின் வெளிப்படை வாரிசான அவரது சகோதரர் முகமது சின்வார்(Mohammed Sinwar) தற்போதைய நிலவரப்படி உயிருடன் இருந்தால் அடுத்த தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் முகமது சின்வாருக்கு அவரது சகோதரர் மற்றும் ஹமாஸின் தலைவரான யாஹ்வா சின்வாரின் அதிகாரமோ அல்லது பின்பற்றலோ இல்லாததால், அவரோ, மற்ற தலைவர்களோ ஹமாஸ் அமைப்பை ஒன்றாக வைத்திருக்க முடியுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.